கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் வேலுமணி

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம், ஊராக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம், ஊராக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.



கொடிசியா தொழிற் கண்காட்சி கூட்டரங்கில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2019 ஜனவரி 23,24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது இதையொட்டி, நேற்று நடைபெற்ற முன்னோட்ட கருத்தரங்கில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் தொழில்துறை அமைச்சர் பேசுகையில், "முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதற்பகுதி கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்றது. இரண்டு நாள் மாநாட்டில் 2.40 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை தமிழகம் ஈர்த்தது. இதில் 5,000-திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.



தற்போது நடைபெற இருக்கும் மாநாட்டின் மூலம் இருபதாயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம். ஆட்டோ மொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவில் முதல் பத்து மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 16 லட்சம் கார்கள் ஆண்டுதோறும் உற்பத்தியாகின்றன. எனவே, அந்த தொழில் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. " என்றார். 

தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "தொழில் நகரமான கோவையில் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மும்பை-பெங்களூர் வரை அமையவிருக்கும் சாலையை கோவை வரை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.



விமான நிலைய விரிவாக்கத்திற்காக முதற்கட்டமாக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சில தினங்களில் அந்த தொகை நிலா உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும், அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு முறையாக செய்து முடித்துள்ளது." என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...