கோவை: கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள குருசாமி பதிப்பகத்திற்கு முன் கட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் படங்களை கிழித்தும், படிப்பகத்தின் மீது கண்ணாடி பாட்டில்களை வீசியும் சமூக விரோத செயலில் ஈடுபட்டிருக்கும் மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை வெங்கிட்டாபுரம் பகுதி குருசாமி படிப்பகத்திற்கு முன் கட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பட பிளக்ஸ் பேனரை கடந்த 5ம் தேதியன்று இரவில் மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். அதேபோல மீண்டும் கடந்த 9ம் தேதி இரவு மர்ம நபர்கள் படிப்பக சன்னலில் கட்டப்பட்டிருந்த பெயர் பலகையில் உள்ள பெரியாரின் படத்தை கிழித்ததோடு, கண்ணாடி பாட்டில்களையும் படிப்பகத்தின் மீது வீசியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக படிப்பகத்தின் பொறுப்பாளர் கதிரவன் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரியார் படிப்பகத்தின் மீது மர்ம நபர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது வெங்கிட்டாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.