கோவை: கோவைப்புதூர் அண்ணா நகரில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து 170 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளையும், 148 பயனாளிகளுக்கு ரூ.44 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் குடியிருப்பு ஆணைகளையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாநகராட்சி கோவைப்புதூர் அண்ணாநகர், மலை நகர் சமுதாயக்கூடத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மாநகராட்சியுடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம், துணை ஆணையாளர் ப.காந்திமதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில், மலைநகர் திட்டப்பகுதியில் ஒதுக்கீடு பெற்ற 148 பயனாளிகளுக்கு ரூ.44 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும், 170 பயனாளிகளுக்கு அடுக்குமாடி ஒதுக்கீடு ஆணைகளையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியம் கண்காணிப்பு பொறியாளர் ஆர்.ராஜசேகரன் வரவேற்று பேசினார். தெற்கு மண்டல உதவி ஆணையாளர் டி.ஆர்.ரவி, இனம் பொறியாளர் ரமேஸ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.