சிங்காநல்லூர் பகுதியில் போக்குவரத்து விதியை கடைபிடித்து வாகனத்தை ஓட்டியவர்களுக்கு பரிசு

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் சாலை விதிகளை மதித்து வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு ஆத்மா அறக்கட்டளை மற்றும் சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து செய்தித்தாள் மற்றும் பேனாக்களை கொடுத்து ஊக்கப்படுத்தினர்.

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் சாலை விதிகளை மதித்து வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு ஆத்மா அறக்கட்டளை மற்றும் சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து செய்தித்தாள் மற்றும் பேனாக்களை கொடுத்து ஊக்கப்படுத்தினர்.

வாகன ஓட்டிகளில் சிலர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் தங்கள் இஷ்டத்திற்கு வாகனத்தை இயக்கி விபத்தை விபத்தை ஏற்படுத்துகின்றனர்.

இதனால் விபத்தில் சிக்கியவர் உட்பட அவரை சார்ந்த பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

சாலை விதிகளை மதிக்காமல் தலைக்கவசம் அணியாமல், கார் ஓட்டும் போது சீட் பெல்ட் போடாமல்,

வருபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்தும் வருகின்றனர்.

ஆனால், வழக்கம்போல சாலை விதிகளை மதிக்காதவர்கள் திருந்தியபாடு இல்லை.

ஆகவே, சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிங்காநல்லூர் பகுதியில் சாலை விதிகளை மதித்து வரும் வாகன ஓட்டிகளுக்கு செய்தித்தாள், பேனா போன்ற பரிசுகளை சிங்காநல்லூர் போக்குவரத்து போலீசாரும், ஆத்மா அறக்கட்டளையும் இணைந்து வழங்கி கௌரவித்தனர்.



இன்று சிங்காநல்லூர் சிக்னல் அருகே சாலை விதிகளை மதித்து வாகனத்தை ஓட்டி வரும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கினர். 

இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...