நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1993-ம் ஆண்டு நவம்பர் 11- ம் நாள் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவத்தின் 25 ஆம் ஆண்டு நினைவுதினத்தை இன்று அனைவரும் நினைவு கொள்ளத்தக்கதாக உள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1993-ம் ஆண்டு நவம்பர் 11- ம் நாள் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவத்தின் 25 ஆம் ஆண்டு நினைவுதினத்தை இன்று அனைவரும் நினைவு கொள்ளத்தக்கதாக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிலச்சரிவுகள் அவ்வப்போது நடந்து வந்தாலும் கடந்த 1993-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி சுமார் 7.5 கிலோ மீட்டர் உயரத்திற்கும், 1.5 கிலோ மீட்டர் அகலத்திற்கும் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் என்ற பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு இன்றும் இம்மாவட்ட மக்களின் உள்ளங்களை பரிதவிக்கவைத்தவையாக உள்ளது.

சமவெளிப் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் எந்த தொடர்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டது.
மலை ரயில்
ஏறக்குறைய 300 மீட்டர் அளவிற்கு மலை ரயில் பாதை முற்றிலும் அடித்து செல்லப்பட்டது.

இதன் காரணமாக 15 நாட்களுக்கு மலை ரயில் மற்றும் சாலை பாேக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு நாட்டின் எல்லையில் பணிபுரியும் துணை ராணுவத்தினரின் உதவியுடன் தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டு உணவுப் பொருட்கள் கொண்டு வர வேண்டிய அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
இதனைத் தாெடர்ந்து, இந்திய புவியியல் துறை நிபுணர் டாக்டர் வி.கே.எஸ். வரதன், சென்னை புவியியல் துறை இயக்குனர் ஷே ஷ கிரி, புவியியல் துறை ஆராய்ச்சியாளர் பி.எஸ்.சாம்ராஜ் ஆகியோர் காெண்ட ஆய்வுக்குழு ஒரு தீர்மானத்திற்கு வந்தது.

அப்போது மலைப்பகுதிகளில் அதிகப்படியான கட்டிடங்கள் கட்டியதும், உயரமான இடங்களில் வடிகால் வசதி இல்லாமல் தேயிலை தோட்டங்கள் அமைக்கப்பட்டதும் இந்த நிலச்சரிவுக்குக் காரணமாக கூறப்பட்டது.
இந்த நிகழ்வுக்குப் பின் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இணைந்து பல்வேறு திட்டங்களை தீட்டி நீலகிரி மாவட்டம் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மிக நிச்சயமாக மூன்றாவது மாற்று வழிப் பாதையை அமைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியது.
மேலும், மாஸ்டர் பிளான் சட்டம் காெண்டு வந்து 7 மீட்டருக்கு மேல் கட்டடங்கள் கட்டக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தனர்.
ஆனால், இந்த நிலச்சரிவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் இன்றோடு நிறைவுற்ற நிலையில் இந்த சட்டங்கள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு அவை எதுவுமே அமல் படுத்தப்படாமல் இருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் தற்போது அடிக்கடி மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.
இந்த சம்பவத்தை நினைவூட்டும் விதமாக நீலகிரி ஆவணம் காப்பக இயக்குனர் வேணுகாேபால் தர்மலிங்கம், பழைய பாதிப்புகளின் புகைப்பட தாெகுப்பினை இன்று வரை காேத்தகிரியில் உள்ள கன்னேரி முக்கு பகுதியில் உள்ள தனது இல்லத்தில் பாெக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

மேலும், இது பாேன்ற பாதிப்புகள் மீண்டும் வராமலிருக்க தன்னால் இயன்ற அளவு அரசின் கவனத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் எடுத்துச்சென்று வருகிறார்.
எனவே இயற்கையின் சீற்றத்தின் பாேது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளை அரசு கண்டறிந்து அதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.