நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார அளவிலான தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு விழா நடைபெற்றது.

அருவி அறக்கட்டளையின் சார்பில் கோத்தகிரி வட்டார அளவிலான தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து விளக்கும் வகையில் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவிய போட்டிகள் நடைபெற்றது. இதில், பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அருவி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, அரிமா சங்க தலைவர் நந்தகுமார், செயலாளர் கணேஷ், ஹில்போர்ட் மேலாளர் ஆனந்த், கீ ஸ்டோன் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த சாரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தொடர்ந்து, பிளாஸ்டிக் இல்லாத பொருட்களான துணிப்பை, காகித பை மற்றும் இயற்கை தயாரிப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், பெண்களின் விழிப்புணர்வு சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கோத்தகிரிப் பகுதியைச் சேர்ந்த திரளானவர்கள் கலந்து கொண்டனர்.