கோவையில் காட்டு யானைகளை பாதுகாக்கக் கோரும் சமூக ஆர்வலர்களின் #Save சின்னதம்பி பிரச்சாரப் போஸ்டர்கள்

கோவை : தடாகம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக வனத்துறையினர் கும்பி யானைகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், சமூக ஆர்வலர்களின் #Save சின்னதம்பி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.


கோவை : தடாகம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக வனத்துறையினர் கும்பி யானைகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், சமூக ஆர்வலர்களின் #Save சின்னதம்பி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு காட்டு யானைகள் பெரிதும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இதனால், ஏற்படும் மனித-விலங்கு மோதல்களால், உயிர் பலியும் ஏற்படுகிறது. குறிப்பாக, சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரண்டு யானைகள்தான் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு வனத்துறை அதிகாரி ஒருவரை காட்டு யானை மிதித்துக் கொன்றது. 

இதனால், காட்டு யானைகளின் தொந்தரவை முறியடிக்கும் விதமாக முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட பொம்மன் மற்றும் விஜய் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், தற்போது, சேரன், ஜான் ஆகிய இரு கும்கி யானைகளும் காட்டு யானைகளை விரட்டுவதற்கான பணியில் ஈடுபடுத்த அழைத்து வரப்பட இருக்கின்றன.

 

இந்த நிலையில், காட்டு யானைகளை விரட்டுவதற்காக வனத்துறையினர் கும்பி யானைகளைப் பயன்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு, #Save சின்னதம்பி, #Save விநாயகன் ஆகிய வாசகங்கள் அடங்கிய பிரச்சாரத்தை முன்வைத்து தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர். மேலும், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் இந்த ஆபரேசனால், வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகளுக்கு அழுத்தம் ஏற்படுவதாகவும், இந்தப் பணிகளின் போது சம்பந்தப்பட்ட காட்டு யானைகளுக்கு பலத்த காயங்கள் ஏற்படுவதுடன், சில சமயம் உயிரையும் இழக்கும் அபாயம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

"மேம்பாட்டு நடவடிக்கைகள் எனக் கூறி வனத்தின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதால், வனங்களை விட்டு யானைகள் வெளியேறும் சூழல் ஏற்படுகிறது. அவ்வாறு வெளியேறும் யானைகள் சிறைபிடிக்கப்பட்டால், வனத்தில் ஒரு விலங்குகளும் இருக்காது. தற்போதைய நடவடிக்கைகளால் தற்காலிகமான தீர்வை மட்டுமே காண முடியும்," என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...