வனத்துறை அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை : வனத்துறையினருக்கு சொந்தமான அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரி பாலியல் புகார் அளித்த கோவை வனத்துறை அலுவலக பெண் ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


சென்னை : வனத்துறையினருக்கு சொந்தமான அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரி பாலியல் புகார் அளித்த கோவை வனத்துறை அலுவலக பெண் ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

முன்னாள் மதுக்கரை வனக் கோட்டத்திற்குட்பட்ட வன அதிகாரி எஸ். கண்ணன் மீது கோவை மாவட்ட வன அலுவலரிடம் பெண் ஒருவர் கடந்த ஜுலை 23-ம் தேதி பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து, அவர் வேலூர் மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பாக விஷாகா கமிட்டி விசாரித்து வருகிறது. 

இந்த நிலையில், வனத்துறையினருக்கு சொந்தமான அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரி வனஅதிகாரி கண்ணன் மீது பாலியல் புகார் அளித்த வனத்துறை அலுவலக பெண் ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிபதி லதா முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததை, சாதகமாகப் பயன்படுத்தி அதிகாரிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், இதனை தடுக்க தொலைதூரப் பகுதிகளிலும் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட வன அதிகாரி கண்ணன், வன ஊழியர்களின் சங்கத்தின் மூலம் விஷாகா கமிட்டியின் விசாரணையில் குறுக்கிட முயற்சிப்பதாகவும், தனது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார். இதனைக் கேட்ட நீதிபதி, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...