திருப்பூர்: திருப்பூரில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் சேவூரில் குடியிருக்கும் ஜெகநாதன் என்பவரது மனைவி மனோன்மணி பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை புரிந்து வருகிறார். ஜெகநாதன் தனது மனைவி மனோன்மணியின் மூலம் அரசு வேலை பெற்று தருவதாகக் கூறி பழனிசாமி என்பவரிடம் ரூ. 2 லட்சம் பெற்றுக் கொண்டு போலியான அரசு முத்திரையிட்ட வேலை உறுதி ஆவணங்களை கொடுத்துள்ளார். இதனை நம்பிய பழனிசாமி தன்னை சார்ந்த பலரிடமும் இது குறித்து தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பலரும் வேலைக்கு தகுந்தாற் போல, ரூ. 2 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை என 37 பேர் ரூ.1.60 கோடி கொடுத்துள்ளனர்.
பணத்தை பெற்றுக் கொண்ட ஜெகநாதன் அனைவருக்கும் பணி நியமனம் தொடர்பான போலி ஆவணங்களையும் அளித்துள்ளார். அதனை நம்பி காத்திருந்தவர்கள் வேலை கிடைக்காததால் பழனிசாமியை வேலை வாங்கி தராவிட்டால் பணத்தை தரும்படி கேட்டுள்ளனர். இதனால், அச்சமடைந்த பழனிசாமி, இது தொடர்பாக ஜெகநாதனிடம் கேட்டுள்ளார். ஆனால், ஜெகநாதன் தன்னிடம் பணம் தரவில்லை என்றும், வேலை வாங்கித் தரமுடியாது எனவும் கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த பழனிசாமி பாதிக்கப்பட்டவர்களுடன் சென்று அரசு வேலை வாங்கி தருவதாக தங்களை ஏமாற்றி 37 பேரிடம் ஒரு கோடியே 60 லட்சம் பெற்று மோசடி செய்த ஜெகநாகன் - மனோன்மணி தம்பதியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.