கோவை : கோவையில் அடுத்தடுத்து ஏற்படும் டெங்கு, பன்றி காய்ச்சல் உயிரிழப்புகளை தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை எடுக்கக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவருடனான மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் போத்தனூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில், சேலம் ஆத்தூர் அருகே சிறுமி ராஜலட்சுமி படுகொலைக்கு கண்டனம், நவம்பர் 10-ல் இருந்து டிசம்பர் 10 வரை தீவிர உறுப்பினர் சேர்க்கை, 10 வருடம் நிறைவு 65 வயதுக்கு மேற்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்ய வேண்டும், டெங்கு, பன்றி காய்ச்சல், மர்ம காய்ச்சலால் உயிரிழப்புகளை தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன் பின்னர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைசி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கோவையில் கட்சியின் மண்டல, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கள்ளப் பணத்தை திரும்பக் கொண்டு வர முடியாத மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, வங்கிகளில் பணத்தை கடனாகப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டு வெளிநாடு செல்வதற்கான கால அவகாசத்தையும் அளித்து உள்ளது. தனது நான்கரை ஆண்டு தோல்விகளை மறைப்பதற்காக ராமர் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசு எடுத்துள்ளது.

ஊர்களின் பெயர்களை மாற்றுவதில் ஆர்வம் காட்டும் மத்திய அரசு, நாட்டின் வணிக முடக்கம், தொழில் முடக்கம் உள்ளிட்டவை குறித்து பேசாமல் மத ரீதியிலான அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சிகள் தங்களுக்கு உள்ள வித்தியாசங்களை மறந்து விட்டு நாட்டை காக்க ஒன்றிணைய வேண்டும். மேலும், மூன்றாவது அணி அல்லது பா.ஜ.க. எதிர்ப்பு அணியின் முழுமையான கொள்கை என்ன என்பது குறித்து அறிந்த பின்னரே எஸ்.டி.பி.ஐ, அதில் இணைவதா என ஆலோசிக்கப்படும். பா.ஜ.க. எதிர்ப்பு என்ற நிலையில் இருந்து மட்டும் அணியை ஆதரிக்க முடியாது. கேரளாவை அயோத்தியாக மாற்றும் விதத்தில் சபரிமலையை விவகாரத்தில் மாற்றுவதே இந்துத்துவ அமைப்புகளின் தீர்மானமாக உள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாநில தலைவர் நெல்லை முபாரக், பொதுச்செயலாளர் நிஜாமுகைதீன், பொருளாளர் அபுதாகீர், மத்திய மாவட்ட தலைவர் முஸ்தாபா, தெற்கு மாவட்ட தலைவர் மிஜூபிர் ரகுமான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.