காதல் திருமணம் காரணமாக ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற போலீசார் மீது கல்வீசித் தாக்குதல்: 10 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் காதல் திருமணம் தொடர்பாக வடமாநில இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்கிய 10 பேரை போலிசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் காதல் திருமணம் தொடர்பாக வடமாநில இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற போலீசார் மீது கல்வீசி தாக்கிய 10 பேரை போலிசார் கைது செய்தனர்.

திருப்பூர் வீரபாண்டியை அடுத்த நொச்சிபாளையம் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல் என்பவரும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மோனிஷா என்பவரும் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் போதே காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். 

இதனையறிந்த இருதரப்பினரும் நேற்று மாலை நொச்சிபாளையம் பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த வீரபாண்டி போலீசார் இரு தரப்பினரையும் தடுத்து விலக்கி விட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக இருதரப்பினரும், போலீசார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். 



பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேலும் சில போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ரூபன்த், ரனாதிக் சக்மா, லோகி குமார், சோவிந், நபி, சந்திப், ஜயோ சக்மா, அன்டிம், சதன், பினுபரன் ஆகிய 10 பேரை கைது செய்து திருப்பூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...