கோவை : குனியமுத்தூர் அருகே ஒர்க்ஷாப் தொழிலாளியின் வீட்டு கதவை உடைத்து 30 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். ஒர்க்ஷாப் தொழிலாளியான இவர், தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ கதவு உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 சவரன் நகை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, நடராஜ் போலீசாருக்கு தகவல் கொடுத்தா. அதன் பேரில், தடயவியல் நிபுணர்களும், போலீசாரும் சோதனை செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.