திருப்பூர்: திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் ஊழியர்களிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 320 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக உதவி மேலாளர் கார்த்தி உட்பட 16 பேரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.