கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென நடுரோட்டில் பழுதடைந்து நின்றதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென நடுரோட்டில் பழுதடைந்து நின்றதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பேரூர் முதல் காந்திபுரம் வரை ரயில்நிலையம் வழியாக செல்லக்கூடிய 14 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து கோவை மாவட்ட ஆட்சியர் ரவுண்டான அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென பேருந்தின் செண்டர் ஆக்சில் உடைந்து பழுதாகி நடுவழியில் நின்றது.
பின்னர், அந்தப் பேருந்தை பயணிகள் சிலர் சேர்ந்து சிறிது தூரம் தள்ளி ஓரமாக நிறுத்தினார்கள். பேருந்து நடுவழியில் நின்றதால் பயணிகள் மிகவும் சிரமம்மடைந்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பேருந்துகள் தரமில்லாமல் இயக்குவதினால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. எதிர்பாராமல் ஏற்படும் பழுதுகளால் இது போன்று ஏற்படுகிறது," என்றார்.