கோவை: கோவையில் வடமாநில தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான சக தொழிலாளிகள், தீபாவளி போனஸ் தொகையில் கமிஷன் கேட்டதால் ஆத்திரத்தில் கொன்றதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஒடிசாவைச் சேர்ந்த சச்சின் (35). இவர் கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள பேப்பர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே குடோனில் ஒரிசாவைச் சேர்ந்த சிலர் வேலை செய்து வந்தனர். கடந்த 5-ஆம் தேதி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. சச்சின் மற்றும் தொழிலாளர்கள் சிலர் மது குடித்து ஜாலியாக இருந்தனர்.
அப்போது, அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், சச்சினின் தலையில் கல்லை போட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். இந்த சம்பவன் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவருடன் பணியாற்றிய ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்ராம் (21), அதுல்யன் (21), கோவர்த்தன (20 ) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- சொந்த ஊரில் வேலை கிடைக்காமல் இருந்த போது எங்களை கோவைக்கு வேலை இருப்பதாக கூறி சச்சின் அழைத்து வந்தார். வேலையில் சேர்த்துவிட்ட பின் அவர் கமிஷன் கேட்டார். முதல் மாத சம்பளம் வாங்கியதும் சிறிது தொகையை கமிஷனாக கொடுத்தோம்.
அதற்குப் பிறகு அவர் அடிக்கடி கமிஷன் கேட்க ஆரம்பித்தார். பணம் தராவிட்டால் முதலாளியிடம் எங்களை பற்றி தவறாக சொல்லி வேலையிலிருந்து நீக்கி விடுவதாக மிரட்டினார். போனஸ் வாங்கியதும் 20 சதவீத தொகையை கமிஷனாக சச்சின் கேட்டார். நாங்கள் தர மறுத்து விட்டோம். அப்போது, அவர் உங்களை இங்கே வேலை செய்ய விட மாட்டேன். சொந்த ஊருக்கே துரத்துகிறேன் பாருங்கள் என சவால் விட்டார்.
இதனால், நாங்கள் ஆத்திரத்தில் சச்சினின் தலையில் கல்லைப் போட்டு நசுக்கி அருகே வைத்திருந்த அரிவாளால் வெட்டிக் கொன்றோம். பின்னர் நாங்கள் தப்பித்து சொந்த ஊருக்கு ஓடி விடலாம் என நினைத்தோம். அதற்குள் சிக்கி கொண்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.