நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜிம்கானா பகுதியில் இரண்டு காட்டெருமைகள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவத்தை கால்ப் விளையாட வந்திருந்த ராணுவ அதிகாரிகள் உள்பட பொதுமக்கள் பலரும் பார்த்து ரசித்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜிம்கானா பகுதியில் இரண்டு காட்டெருமைகள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவத்தை கால்ப் விளையாட வந்திருந்த ராணுவ அதிகாரிகள் உள்பட பொதுமக்கள் பலரும் பார்த்து ரசித்தனர்.

குன்னூர் அருகே உள்ள ஜிம்கானாப் பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் சுற்றிலும் பேரக்ஸ் வெலிங்டன், பிளாக் பீரிட்ச் போன்ற பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வாழ்ந்து வருகின்றன.
இவை அவ்வப்போது சாலைகளுக்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சூழல் இருந்து வந்த நிலையில், ஜிம்கானப் பகுதியில் உள்ள கால்ப் கிரவுண்டு விளையாட்டு மைதானத்திற்குள் புகுந்த இரண்டு காட்டெருமைகள் சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இதனை அங்கு கால்ப் விளையாட வந்த ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பார்த்து ரசித்தனர். இரண்டு காட்டெருமைகளும் ஒருமணிநேர சண்டைக்குப் பிறகு அருகிலிருந்த சோலைப் பகுதிக்குள் புகுந்தன.