கோவையில் சாலையில் ஓடிக் கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு

கோவை : உக்கடம் குளக்கரை சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில் அதிஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர்தப்பினர்.


கோவை:  உக்கடம் குளக்கரை சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில் அதிஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர்தப்பினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜூபாலகிருஷ்ணன் (37). இவர், நேற்று இரவு தனது காரில் மனைவி அமுதா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் உக்கடம் குளக்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இயந்திரகோளாறு காரணமாக திடீரென கார் தீப்பிடித்தது. இதனை சற்றும் எதிர்பாராத பிஜூபாலகிருஷ்ணன் உடனடியாக காரை நிறுத்தியதுடன், காரிலிருந்த தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் உடனடியாக இறக்கி விட்டார். அதேநேரத்தில் காரில் பரவிய தீயால் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

இதையடுத்து, தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த உக்கடம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...