நீலகிரி: குன்னூர்-கோத்தகிரி சாலையில் உள்ள எடப்பள்ளி அருகே ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது.
நீலகிரி : குன்னூர்-கோத்தகிரி சாலையில் உள்ள எடப்பள்ளி அருகே ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது.
இந்த கோவில் வளாகத்தில் மழைக் காலத்தில் மண் சரிவு ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து மண் சரிவை தடுப்பதற்காக தடுப்பு சுவர் கட்ட கோவில் நிர்வாகம் தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்தது.
இதனடிப்படையில், கடந்த சில நாட்களாக தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த பணியில் வட மாநில தொழிலாளர்களும் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த சூழலில், நேற்று வழக்கம் போல தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோம்ரா விஞ்சய் யா என்பவரும் அவரது மகன் ஜெகதிஷ் (24) ஆகியோரும் ஈடுபட்டு இருந்தனர்.

மாலை 5.45 மணிக்கு பணி நடைபெற்றுக் கொண்டு இருந்த போது தடுப்பு சுவர் அமைக்கும் இடத்தில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது.
மண் சரிவின் போது அருகில் இருந்த ஜெகதிஷ் மீது மண் சரிந்து மூடியது.
ஜெகதிஷின் தந்தை சோம்ரா விஞ்சய்யா கால் மண் சரிவில் சிக்கிக் கொண்டது.
மண் சரிவு ஏற்பட்ட சத்தம் கேட்டவுடன் மற்ற தொழிலாளிகள் ஜெகதீசை மூடிய மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் ஜெகதிஷ் மூச்சு திணறி பலியானார். இது தொடர்பாக, சக தொழிலாளர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆம்புலன்ஸ் மூலம் ஜெகதிஷின் உடல் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

தகவலறிந்த வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகதீசின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மண் சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.