பனிக் காலத்தை வரவேற்கும் வகையில் பூத்து குலுங்கும் அரிய வகை மலர்கள் : உறை பனியை காண உதகை விரையலாம்

நீலகிரி : மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நீர் பனி பொழிவு மற்றும் நவம்பர் 15-ம் தேதி உறை பனி பொழிவு காணப்படும்.


நீலகிரி : மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நீர் பனி பொழிவு மற்றும் நவம்பர் 15-ம் தேதி உறை பனி பொழிவு காணப்படும். 

இந்த காலங்களில் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மினி காஷ்மீர் போல் காட்சியளிக்கும்.



இந்த நீர் பனி பொழிவு மற்றும் உறை பனி சீசனை வரவேற்கும் வகையில் உதகை முழுவதும் உள்ள மலைப்பாதையில் உள்ள வனப்பகுதிகள் முழுவதும் காட்டு டேலியா மலர்கள் நிறைந்து காணப்படும். 

இதை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முழுவதும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும். 



இந்நிலையில், இந்தாண்டு மேலும் அழகு சேர்க்கும் வகையில் நீலகிரி மலைப்பாதையில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் வாடா மல்லி மலர்களும் அதை போல சிறு குறிஞ்சி மலர்களும் பூத்துள்ளன. 

இதை உதகைக்கு வரும் சுற்றுலா சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். 



மேலும், உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நீர் பனி பொழிவு காணப்படுவதோடு, ஊதா, நீலம் என பல வகை காட்டு செடிகளில் அறிய வகை மலர்கள் பூத்துள்ளதால் பசுமையாகக் காணப்படுகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...