கோவை: தடாகம் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் யானை-மனித மோதல்களை தடுக்க சாடிவயல் முகாமில் இருந்து சேரன் மற்றும் ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கோவை: தடாகம் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் யானை-மனித மோதல்களை தடுக்க சாடிவயல் முகாமில் இருந்து சேரன் மற்றும் ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முன்னதாகவே முதுமலையில் இருந்து விஜய் மற்றும் பொம்மன் என்ற இரண்டு யானைகள் வரவழைக்கப்பட்டிருந்த போதும், சேரன் மற்றும் ஜான் முன்னதாகவே இந்த பகுதியில் அனுபவம் பெற்ற காரணத்தால் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் வேங்கடேசன் கூறுகையில், "முன்னதாகவே வன பாதுகாவலர்கள் மேற்கொண்ட பணிகளையும், காட்டு யானைகள் புகாமல் பாதுகாக்கும் பணியையும் இந்த நான்கு யானைகள் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது." என்றார்.