கோவை: மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு இரண்டாண்டுகள் நிறைவு பெற்றள்ள நிலையில் அதை கருப்பு தினமாக அனுசரிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறிய அவர்கள், வரும் தேர்தலில் பா.ஜ.க அரசை மக்கள் தூக்கியெறிவார்கள் என தெரிவித்தனர்.