சென்னை: சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் மறு தணிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மதியம் முதல் திரையிடப்பட உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு சர்கார் திரைப்படம் வெளியானது.
படத்தின் தலைப்பு வெளியானது முதலே சர்காரை சர்ச்சை தொற்றிக்கொண்ட நிலையில், படம் வெளியாகிய நாளில் இருந்து விவாதத்திற்கு உள்ளானது.
இந்த படத்தில் அ.தி.மு.க.,வினருக்கும், அக்கட்சிக்கும் எதிராக ஒரு தலை பட்சமாக முரணான கருத்துக்கள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், தி.மு.க.,வுக்கு சாதகமாக படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
இந்த சூழலில், நேற்று சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை அ.தி.மு.க.,வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பல்வேறு இடங்களில் படத்தின் பேனர்கள் சேதப்படுத்தப்பட்டன. சட்டம் & ஒழுங்கு பிரச்சனை எழும் என்ற பரபரப்பான சூழல் தமிழகம் முழுவதும் தொற்றிக்கொண்டது.
இந்த சூழலில், படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புதல் அளித்தது.
அதன்படி இன்று சர்கார் திரைப்படம் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. தற்போது மறு தணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், மதியம் முதல் படம் திரையிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.