கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம் (59). உடற்பயிற்சி ஆசிரியர். இவரது மனைவி சிவகாமி சுந்தரி.

இந்த சூழலில், கடந்த 05-ம் தேதி சச்சிதானந்த்திற்கு இரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை, அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 07-ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மனைவி சிவகாமி சுந்தரி தனது கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டது.
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், கண்கள், எலும்பு மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இது குறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி கூறுகையில், "மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும்." என்றார்.