கோவை: கோவையில் நடைபெற இருந்த மேற்குத்தொடர்ச்சி மலை மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "இந்த மாநாடு ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நவம்பர் மாதம் 30-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 2-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற இருந்தது. ஆனால், தவிர்க்கமுடியாத காரணத்தால் மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை நடைபெறும்.
உலகம் முழுவதிலும் இருந்து இந்த மாநாட்டிற்கு வருகை தரும் ஆர்வலர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் தமிழக முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்." என்றனர்.