கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் சுமார் மூன்றிலிருந்து நான்கு பேர் வரை உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பீளமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி (28) என்பவர் நேற்று இரவு உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த காயத்ரி உடல்நிலை மோசமடைந்ததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே போல் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சூலூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்ற 39 வயது பெண்மணியும் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
