கோவை : பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பை கண்டித்து கோவையில் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை திரும்பப் பெற்றுக் கொண்டது. இதனால், அனைத்து துறையினரும் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகினர். இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட நாளான இன்று மோசடி நாளாக அனுசரித்து ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் அனுமதி கோரினர்.

ஆனால், காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், கரும்புக்கடை பகுதியில் உள்ள அக்கட்சியின் அலுவலக மொட்டை மாடியில் கையில் மெழுகுவர்த்தி, தீப்பந்தம் ஏந்தியபடி மத்திய அரசையும், பா.ஜ.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாவிட்டால் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறிய பிரதமர் மோடி, தற்போது தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.