நீலகிரி : கோத்தகிரி அருகே நடிகர் விஜயின் சர்க்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.,வினர் எரிக்க வைத்திருந்த பேனரை விஜய்யின் ரசிகர் கூட்டத்தில் புகுந்து எடுத்துச் சென்று ஓடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சர்கார் படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடிகர் விஜயின் உருவப்படம் அடங்கிய பேனரை எரிப்பதற்காகப் பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க.,வினர் ஒன்று கூடியிருந்தனர்

அப்போது, கூட்டத்திற்குள் யாருக்கும் தெரியாமல் உள்ளே புகுந்த தீவிர ரசிகர் ஒருவர், அ.தி.மு.க., நிர்வாகியின் கையில் எரிப்பதற்காக வைத்திருந்த பேனரை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டார். இதனால், வெகுநேரம் காத்திருந்த அ.தி.மு.க.,வினர் மற்றொரு விஜய் படத்தினையும், வக்கிப் பில்லையும் எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, அப்பகுதியில் நகைச்சுவை கலந்த அமைதி நிலவியது. காவல்துறையினரும் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தனர்.