Exclusive : வால்பாறை மக்களுக்கு கானல்நீராகும் ஆம்புலன்ஸ் சேவை : நோயாளிகளுடன் நடுவழியில் பழுதாகி நிற்கும் வாகனங்களால் பொதுமக்கள் சிரமம்

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் 108 ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி நோயாளிகளுடன் செல்லும்போது நடுவழியில் பழுதாகி நிற்பதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.


கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் 108 ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி நோயாளிகளுடன் செல்லும்போது நடுவழியில் பழுதாகி நிற்பதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகரம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 1,193 மீட்டர் (3,914 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த வால்பாறையில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த வால்பாறை பகுதியில் சோலையார் டேம், முட்டீஸ், காடம்பாறை, சின்ன கல்லாறு போன்ற பல பகுதிகள் உள்ளன. இந்த ஊர்களில் பழங்குடியின மக்களும் மற்றும் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர். தேயிலை தொழிலை மட்டுமே நம்பி வாழும் இந்த மக்கள் பல கடும் சிரமங்களில் தங்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.



இந்த வால்பாறை பகுதியில் சிறுத்தை மற்றும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பலர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகள் கடித்தும் பலர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, வால்பாறை பகுதியில் சாலைகள் தாறுமாறாக இருப்பதால் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும், இப்படி பல்வேறு பிரச்சினைகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை கொடுக்க வால்பாறை அரசு மருத்துவமனை, வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையம், சோலையார் ஆரம்ப சுகாதார நிலையம், முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையம் என வால்பாறை நகரத்தில் மொத்தம் 4 அரசு மருத்துவமனைகள் உள்ளது.

இந்த நான்கு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுபவர்களுக்கு மேல்சிகிச்சை கொடுக்க பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது வழக்கம். இப்படி வால்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்ல பொதுமக்கள் 108 ஆம்புலன்சை பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் ஏழ்மையான இந்த வால்பாறை பகுதி மக்களுக்கு இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே வால்பாறை பகுதியில் உள்ள நான்கு 108 ஆம்புலன்ஸ்களும் அடிக்கடி பழுதாகி வருகிறது. இதனால், ஆம்புலன்ஸ் சேவைகள் இன்றி நோயாளிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். 

108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை :

பொள்ளாச்சி பகுதியில் மொத்தம் எட்டு - 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. அதேபோல, வால்பாறையில் நான்கு வண்டியும், இதுபோக மேட்டுப்பாளையம் பகுதியில் ஐந்து வண்டியும் மீதம் உள்ள 20 வண்டிகள் கோவை மாநகரிலும் உள்ளது. இதில், வால்பாறையில் உள்ள நான்கு 108  ஆம்புலன்ஸ்களும் நோயாளிகளின் மேல்சிகிச்சைக்கு அவர்களை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. இப்படி மிகவும் அத்தியாவசியமான உயிருடன் சம்பந்தப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் சேவை கடந்த சில மாதங்களாக சரியான நேரத்தில் கிடைக்காததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அல்லல்படும் பொதுமக்கள்:

வால்பாறை பகுதியில் வாழும் பொதுமக்கள் ஏற்கனவே அடிப்படை வசதிகள் இன்றி வேதனையில் வாழ்ந்து வருகின்றனர். அதுபோக, இவர்களுக்கு இங்கு போதுமான மருத்துவ வசதிகளும் கிடைப்பதில்லை. இப்படியிருக்க கர்ப்பிணி பெண்கள் தொடங்கி விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் என பல நோயாளிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால், தற்போது 108 ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி பழுதாவதால் வால்பாறை மக்கள் பெரிதும் துன்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, நோயாளிகளை ஏற்றிச் செல்லும் 108 ஆம்புலன்சுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடுவழிகளில் நிற்கும் அவலங்கள் இங்கு அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது.

கேள்விக்குறியான 108 ஆம்புலன்ஸ்:

வால்பாறை நகராட்சியில் பொதுமக்களின் அவசர தேவைக்காக வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் TN 66 G 0758 என்ற எண் கொண்ட 108 ஆம்புலன்சும், முடீஸ் பகுதியில் TN 66 G 0759 என்ற எண் கொண்ட ஆம்புலன்சும், சோலையார் டேம் அருகே TN 23 G 1256 என்ற எண் கொண்ட ஆம்புலன்சும், வால்பாறை அரசு மருத்துவமனையில் TN 57 G 0687 என்ற எண் கொண்ட ஆம்புலன்சும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இவை அடிக்கடி பழுதாவதால் பொதுமக்களுக்குப் பயன்பாடின்றி போகிறது. 



வால்பாறை பகுதிக்கு நான்கு ஆம்புலன்சுகள் ஓடிக் கொண்டிருந்தும், போதுமானதாக இல்லை. இப்படி இருக்க அடிக்கடி ஆம்புலன்ஸ்கள் பழுதாவதால் ஒன்று முதல் இரண்டு ஆம்புலன்சுகள் மட்டுமே அவசர உதவிக்கு பயன்பட்டு வருகிறது. அதுவும் பல நேரங்களில் பொதுமக்களின் அவசர உதவிக்கு பயன்படாமல் போவதால் கோட்டூரில் இருந்து வால்பாறைக்கு வந்து நோயாளியை மீட்டு மீண்டும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் சூழல்களும் உள்ளது. வெகுதூரப் பயணங்கள் நோயாளிகளின் பொன்னான நேரத்தை வீண் அடிப்பதால் பல நேரங்களில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது.

கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த அவலம்:

நேற்று வால்பாறையை சேர்ந்த சரண்யா என்ற கர்ப்பிணி பெண் வால்பாறை மருத்துவமனையிலிருந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு TN 66 G 0758 என்ற எண் கொண்ட 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது, 37-வது கொண்டை ஊசி வளைவு அருகே ஆம்புலன்ஸ் பிரேக் டவுன் ஆகி நின்றுவிட்டது. இதனால், கர்ப்பிணிப் பெண்ணும் அவருடன் சென்ற உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இந்த கர்ப்பிணி பெண்ணை பொள்ளாச்சி மருத்துவமனைக்குக் கூட்டி செல்ல வால்பாறை பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ்களுக்கு அழைத்தனர். ஆனால், அங்கு ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டில் இல்லாததால் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. இந்த வெகுதூரப் பயணங்கள் கிட்டத்தட்ட 2.30 மணிநேரம் வரை கர்ப்பிணி பெண்ணை காத்திருக்க வைத்திருந்தது.

இதுகுறித்து அவரது உறவினர் ஒருவர் கூறும்போது :- நாங்கள் வெகுநேரம் காத்திருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண் சரண்யாவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தோம். ஆனால், அவசரகதிக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர், சிலமணி நேரங்கள் கழித்து வால்பாறை இல்லாமல் வேறொரு பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் வந்து எங்களை அழைத்துச் சென்றது. இது எங்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. ஆகவே, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் ஆம்புலன்ஸ் நிர்வாகம் பார்த்துக்கொள்ள வேண்டும், என்றார்.

பளபளக்கும் டயர்கள் :

வால்பாறை பகுதியில் பொதுமக்களின் அவசரத் தேவைக்கு உதவும் 108 ஆம்புலன்சுகளின் டயர்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. நோயாளிகளைப் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ்களே பாதுகாப்பற்று இருக்கிறது. குறிப்பாக, நேற்று கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துச் சென்று நடுவழியில் நின்ற TN 66 G 0758 என்ற ஆம்புலன்சில் இருந்த நான்கு டயர்களிலும் கம்பிகள் தெரியும் அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சாதாரண சாலைக்கு கூட பயன்படாத இந்த டயர்கள் அதிவேகமாக செல்லக்கூடிய 108 ஆம்புலன்சில் எப்படி பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது. அதுவும் மலைப்பகுதிகளில் இந்த வாகனத்தை ஓட்டி செல்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். 



ஆகவே, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் உடனடியாக ஆம்புலன்ஸ்களில் உள்ள பழுதுகளை சரி செய்ய வேண்டும். முடிந்தவரை மலைப்பகுதிகளுக்கு பாதுகாப்பான புதுவாகனங்களை இயக்கித் தர வேண்டும் என வால்பாறையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து வால்பாறையை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் அசீஸ் கூறியதாவது :- வால்பாறையில் உள்ள நான்கு ஆம்புலன்ஸ்களில் 3 ஆம்புலன்ஸ்கள் செயல்படாமல் இருப்பது பொதுமக்களின் உயிர்களை கேள்விக்குறியாக்குகிறது. அதேபோல, ஆம்புலன்ஸ்களின் டயர்களின் உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு பளபளவென இருக்கிறது. இது வாகனத்தை ஓட்டும் பொழுது விபத்துக்கு வழிவகுக்கும். அதே போல, வால்பாறை பகுதியில் அடிக்கடி 108 ஆம்புலன்ஸ்கள் பழுதாவது என்பது வேதனைக்குரியது. 



இந்த வாகனங்கள் ரிப்பேர் ஆவதும், மறுபடியும் செயல்பட்டு வருவதும், மீண்டும் ரிப்பேர் ஆவதுமாகவே உள்ளது. 108 ஆம்புலன்சிற்கு தேவையான உபகரணங்களை தரமாக போட்டால் இது போன்று அடிக்கடி பழுதாகாது. ஆகவே, நிர்வாகம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

கானல்நீரான ஆம்புலன்ஸ் சேவை : 

மலைவாழ் மக்களும், ஏழை மக்களும் அதிகமாக வாழும் வால்பாறை பகுதியில் அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவை என்பது வரப்பிரசாதம். ஆனால் இந்த சேவை முழுமையாக கிடைக்காமல், அடிக்கடி சாலைகளில் பழுதாகி பயன்படாமல் இருக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவை பொதுமக்களுக்கு கானல்நீராக உள்ளது. .ஆகவே, தமிழக அரசு ஆம்புலன்ஸ் சேவைகளை உன்னிப்பாக கவனித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...