'சர்கார்' சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல்

அ.தி.மு.க.,வின் கடும் எதிர்ப்பு காரணமாக நடிகர் விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வின் கடும் எதிர்ப்பு காரணமாக நடிகர் விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தில், அரசியல் சூழ்நிலையை விவரித்தும், கள்ள ஓட்டு பற்றியும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கி கூறியிருந்தார். இப்படத்தில் அரசு கொடுக்கும் விலையில்லா பொருட்களை மக்கள் தீவைத்து எரிப்பது போன்ற காட்சிக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும், அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியன், சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டு, நாளை பிற்பகல் முதல் திரையிடப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...