நீலகிரி : உதகையில் இருந்து மைசூர் செல்வதற்காக கல்லட்டி மலைப் பாதையை பயன்படுத்த வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கும், வெளிமாநில வாகனங்களுக்கும் தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

உதகையில் இருந்து மைசூர் செல்வதற்கு கல்லட்டி மலைப்பாதை வழியாக செல்லும் போது 10 கிலோ மீட்டருக்கும் மேல் குறைவு என்பதால் . பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்த மலைப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை மிகவும் குறுகியதாகவும், அதிக கொண்டை ஊசி வளைவுகளையும் கொண்டிருப்பதால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே, இந்த சாலையை நீலகிரி மக்கள் மற்றும் நீலகிரியில் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறையினர் உத்தரவிட்டு, அதற்கான அனுமதி ஸ்டிக்கர்களையும் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில், கர்நாடகா, கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தனியார் சுற்றுலா வாகனங்கள் தடையை மீறி இந்த கல்லட்டி மலைப்பாதையில் சென்று வருவதால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, காவல்துறையினர் அதிக கவனம் செலுத்தி சுற்றுலா வாகனங்கள் மற்றும் வெளிமாநில வாகனங்கள் இந்த சாலையில் பயணிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, "சில சுற்றுலா வாகனங்கள் மற்றும் வெளிமாநில வாகனங்கள் தடையை மீறி சென்று வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளனர்.