கோவை: மத்திய அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என துப்புரவு பணியாளர்களிடம் தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் வலியுறுத்தினார்.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு கண்காணிப்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி காந்திபுரம் பகுதியில் உள்ள சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தேசிய பட்டியல் இன ஆணையத்தின், துணைத்தலைவர் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷன் திட்டம் மற்றும் பீம் திட்டம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களும் இணைந்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேசம் முழுவதும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பல்வேறு ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கும் நடவடிக்கைகளையும், ஆதி திராவிட மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆனையம் சார்பில் பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறோம்.
சமீபத்தில் சேலத்தில், சிறுமி ராஜலட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் உள்ள ஆதி திராவிட மாணவர்களுக்கான உண்டு, உறைவிட பள்ளிகள் தரமற்றதாக காணப்படுகிறது. இது குறித்தும் தலைமைச் செயலாளரிடம் முறையிட்டுள்ளோம்.
மேலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். சட்ட மேதை அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலை மற்றும் படங்களை நிறுவவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகிறோம்." என்றார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.