திருப்பூர்: இலங்கையில் ராஜபக்சே பிரதமராக பதவியேற்றால் போர்க்குற்ற விசாரணை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிந்தித்து செயல்பட வேண்டும் என திருப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

வரும் டிசம்பர் 10-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள தேசம் காப்போம் மாநாடு குறித்த கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், "சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து வரும் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு மதச்சார்பற்ற இயக்கங்களை இணைக்கும் முக்கிய மாநாடாக அமையும்.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடத்த ராஜபக்சே அனுமதிக்க மாட்டார் என்பதால் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ் மக்களுக்கும் இந்திய அரசுக்கும் மோசமான சூழலையே ஏற்படுத்தும்.

ஆகையால் இன்று இலங்கையில் ஆட்சி அமைய தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய பங்குள்ளதால் அதனை சம்பந்தம் தலைமையிலான கூட்டணி சரியான முடிவை எடுக்க வேண்டும். கருத்துரிமை என்பது ஒரு கட்சியை அல்லது தனி நபரை மையப்படுத்தி சினிமா எடுப்பதைத் தான் வரவேற்கவில்லை. ஆனால் பொதுவாக எடுக்கவேண்டும்.
அதேபோல் அதிகாரத்தை பயன்படுத்தி காட்சிகளை நீக்கச்சொல்வது என்பது சிந்திக்கவேண்டிய ஒன்று. 20 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி இடங்கள் கலியாக உள்ள நிலையில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்." என்றார்.