பன்றி காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவையில் மூவர் பலி

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் சுமார் மூன்றிலிருந்து நான்கு பேர் வரை உயிரிழந்து வருகின்றனர்.



இந்த காய்ச்சலின் மரணங்கள் மறைக்கப்படும் அளவிற்கு சுகாதாரப் பணிகள் முறைப்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போத்தனூரை அடுத்த கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்த முத்துகுமார் (42) இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், இவர் எந்த காய்ச்சல் தொற்றி உயிரிழந்தார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

இதேபோல் மூளை காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கருமத்தம்பட்டி அடுத்த ராயர்பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்றைய நிலவரப்படி, கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் காரணமாக 9 பேரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 4 பேரும் 84 பேர் சாதாரண காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...