சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாததால் திரைத்துறையினருக்கு குளிர்விட்டுப் போய்விட்டதாகவும், ஹீரோக்கள் தங்களை முன்னிலைப்படுத்தப் பிறரை அவமதிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- "சர்கார்" படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயரை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர் இல்லை என்று தினகரன் கூறி இருக்கிறாரே?
பதில்:- திரைப்படம் எடுப்பவர்கள், நடிகர்- நடிகைகளுக்கு இப்போது ஒரு பேஷனாகி விட்டது. அம்மா இல்லாததால் அவர்களுக்கு குளிர்விட்டு போய் விட்டது. அம்மா இருக்கும்போது இதுபோல் ஏதாவது ஒரு படத்தில் கருத்து வந்ததுண்டா? என்று யோசியுங்கள்.
இவர்கள் எல்லாம் அம்மா இருக்கும்போதே எடுத்திருந்தால் இவர்களின் வீரத்தை மெச்சி இருப்போம். அவரவருக்கு ஒரு ஆசை இருக்கும். திரைப்படத்தில் முதல்-அமைச்சர் கேரக்டர் எடுத்து நல்லது செய்ய வேண்டும் என்பது போல பல ஆசைகள் இருக்கும். அது தவறு இல்லை. ஆனால் ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் தீர்மானம் செய்வது தான்.
அவரவர் கொள்கைகளை சொல்லி, லட்சியங்களை சொல்லி அந்த கருத்துக்களை பிரதிபலிப்பதாக படம் இருந்தால் அது ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.
ஆனால், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிறருடைய உணர்வுகளை மிதித்து அவர்களின் எண்ணங்களை சிதைத்து, எல்லா தமிழ் மக்களின் உணர்வுகளை அழிக்கும் செயலை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒரு திரைப்படம் மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லுகின்ற சாதனமாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் எம்.ஜி.ஆர். படங்களுக்கெல்லாம் எந்த காலத்திலும் விமர்சனம் எழுந்ததில்லை.
இந்த உலகம் உள்ள வரை எல்லோராலும் போற்றப்படக் கூடிய ஒரு தலைவர் எம்.ஜி.ஆர். இவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். போல வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒரு காலத்திலும் முடியாது.