கோவை: கோவையில் உள்ள தூமனூர் மலை கிராமத்தில் பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்ட பசுமை வீடுகள் பல ஆண்டுகளாக பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள இந்த மலை கிராமத்தில் 42 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டிக்கொடுக்க கடந்த 2016-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. இந்த ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.2.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நாள் வரையில் ஒரு வீடு கூட முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கட்ட கோரிக்கைகளை முன் வைத்ததன் தொடர்ச்சியாக வரும் ஜனவரி மாதத்திற்குள் பசுமை வீடு கட்டும் பணிகள் முழுமையாக நிறைவடையும், என்றும், பொங்கல் தினத்தில் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த வீடுகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணிகள் கூட நடைபெறாமல் இதுநாள் வரையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு இடையே பாதுகாப்பாக வாழ ஒரு வீடு வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து சமீபத்தில் சிம்ப்ளிசிட்டி செய்தி வெளியிட்டு, தக்க அதிகாரிகளிடம் பிரச்சினையை கொண்டு சென்றது. விரைந்து பணிகளை முடிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், இன்னும் பணிகள் நிறைவடையாமல் இருப்பதை தொடர்ந்து, மீண்டும் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முற்பட்டோம். ஆனால், அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை.
இந்த நிலையில், வாழ்வாதாரமாக இருக்கும் வீட்டை உடனடியாக அமைத்துத் தர வேண்டும் என்று தூமனூர் பகுதி மக்கள் வேதனையுடன் கோரிக்கை விடுக்கின்றனர்.