கோவை: தடாகத்தை அடுத்த நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இன்று அதிகாலை இவரது வீட்டினுள் குட்டிகளுடன் சில காட்டு யானைகள் புகுந்தன.

அப்போது குட்டி யானை மட்டும் வீட்டினுள் லாவகமாக புகுந்து அங்கிருந்த அரிசி மூட்டையை எடுத்துக் கொண்டு வெளியேறியது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அங்கு சென்று யானைகளை விரட்டினர். மீண்டும் ஒரு மணி நேரத்தில் அங்கு வந்த யானைகள் அரிசி மூட்டைகளை சேதப்படுத்திவிட்டு சென்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.