திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கோவை மாநகர தனிப்படை போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் சந்தேகத்துக்கிடமான நபரை போலீசார் விசாரித்ததில், அவர் கோவையில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்துள்ளதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார் 80க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை மீட்டனர்.

கடந்த 6ம் தேதி அதிகாலை கோவை மாநகர தனிப்படை போலீஸார் இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் கிடைத்த தகவலின் பேரில் திருநெல்வேலியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தமிழ்நாடு 66 E 49 33 என்ற வாகனத்தில் வந்த ஜப்பாரின் மகன் ரசூல் முகைதீனை(43) போலீசார் சோதனை செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார், ரசூலிடம் நடத்திய தீவிர விசாரணையில் ரசூல் கே ஜி ஹாஸ்பிடல் அருகே வாகனத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.

அதேபோல சென்னை, மதுரை, கோவை போன்ற பல்வேறு மாவட்டங்களில் கிட்டத்தட்ட 150 இருசக்கர வாகனங்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அதேபோல 80 இரு சக்கர வாகனங்களை கோவை மாநகரில் உள்ள ஃபுரூப் பீல்ட்ஸ், ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கிராஸ்கட் வீதி, கேஜி மருத்துவமனை அருகே, அவிநாசி சாலை ஆகிய இடங்களில் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
மேலும், குற்றவாளி வாகனத்தைத் திருடிய உடன் உடனடியாக ஆம்னி பேருந்து மூலமாக நெல்லையைச் சேர்ந்த இசக்கி பாண்டி, மாடசாமி, துரை ,மொய்தீன், மூசா ஆகியோர்களுக்கு விற்க அனுப்பிவிடுவதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குற்றவாளி வாக்குமூலத்தில் குறிப்பிட்டதாவது; நாங்கள் திருடிய இருசக்கர வாகனத்தின் பணத்தை பாதிக்குப் பாதி சரிசமமாக பிரித்துக் கொள்வோம். இதில் வரும் பணத்தை எனக்கு வங்கி கணக்கில் செலுத்திவிடுவார்கள் என்றார். கோவை மாநகரில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போனதை அடுத்து தற்போது போலீசார் மீட்டு வந்துள்ள இருசக்கர வாகனங்களை உரிமையாளர்கள் வந்து தங்களுடைய வண்டிக்கான ஆதாரங்களைக் காட்டி நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.