திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தீபாவளி நாளில் அரசு மதுபானக்கடை மூலமாக ரூ. 8.5 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட ரூ. 61 லட்சம் கூடுலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலமாக இந்தியாவிற்கு அந்நிய செலாவணியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் மாவட்டமாக பெருமை பெற்ற திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழில் கொடிகட்டிப் பறந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து தொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை வளர்த்துக்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும் கடுமையாக உழைத்து ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி போனசாக கணிசமான தொகை பெற்று, தங்களது அத்தியாவசிய தேவைகளையும், குடும்பத்திற்கு தேவையான காரியங்களையும் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளியன்று டாஸ்மாக் மதுபான கடைகள் மூலமாக ரூ. 350 கோடி மது விற்பனைக்கு இலக்கு வைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் தமிழக அரசால் முடுக்கி விடப்பட்டிருந்தனர்.
இதன் காரணமாக, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், தாராபுரம், காங்கயம், அவினாசி, உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 236 டாஸ்மாக் மதுபான கடைகளில், தீபாவளி தினமான நேற்று 8 கோடியே 47 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளியன்று விற்பனையான தொகையை விட 61 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் அதிகம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.