விவசாயிகள் பெயரில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைப்பதாக அ.தி.மு.க., பிரமுகர்கள் மீது புகார்

திருப்பூர் : விவசாயிகள் பெயரில் அ.தி.மு.க., பிரமுகர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் : விவசாயிகள் பெயரில் அ.தி.மு.க., பிரமுகர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

சம்பந்தபாளையம் கிராமத்தில் ஏற்கனவே சடையபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அப்பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதற்கு அருகாமையிலேயே பால் சேகர மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர்கள் சிலர், அரசியல் போட்டி காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் ஆவணங்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி புதியதாக பால் கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி கோரியுள்ளனர். 

இதனிடையே, இந்த பால் கூட்டுறவு சங்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என கட்சி சார்பற்ற விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால்வளத்துறை துணைஆணையரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...