இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசுகளைக் காட்டிலும், மது மற்றும் மாமிசத்திற்கே பொதுமக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு நேற்று மாமிசம் மற்றும் மது விற்பனை களைகட்டியது. விற்பனைக்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் விற்பனை குறைவால் ஏராளமான பட்டாசுகள் தேக்கம் அடைந்தது. வழக்கமாக, தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனையாளர்கள் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பட்டாசுகள் ஆர்டர் செய்து ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே விற்பனை செய்து வருவது வழக்கம்.

இந்த நிலையில், பட்டாசு விற்பனைக்கு வைக்கப்படும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும், தீயனைப்புத் துறை காவல்நிலையத்தில் இருந்து தடை இல்லா சான்று பெற வேண்டும், கடைகளில் புறவாசல் வழி வைக்க வேண்டும் என இந்த ஆண்டு பட்டாசு கடைகள் அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பட்டாசு விற்பனையாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். இதனால், ஆண்டுதோறும் பட்டாசு விற்பனை செய்து வந்தவர்கள் இந்த ஆண்டு 3 நாட்களுக்கு முன்பு தான் கடை அமைத்தனர். இருப்பினும், தீபாவளி முந்தைய நாள் வரை விற்பனை படு மந்தமாகவே இருந்தது.அதன் பின்னர் விற்பனை ஓரளவு சூடு பிடித்தது.

தீபாவளி அன்றும், அன்று மாலையும் விற்பனை நடைபெற்றும் ஏராளமான பட்டாசுகள் தேக்கம் அடைந்ததால் விற்பனையாளர்கள் கவலை அடைந்தனர். கோவையில் இதேநிலை தான் பெரும்பாலான இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பட்டாசு விற்பனையாளர்கள் கூறியதாவது :- தொடர் விடுமுறை உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு பட்டாசு விற்பனை சரிவடைந்ததாகக் கூறினர். இவர்களது நிலை இப்படி இருக்க மாமிச விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதியது. காலை முதலே கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது. மது பிரியர்களோ தங்களது கடமையில் கண்ணாக நீண்ட வரிசையில் நின்று மது வாங்க காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு இடங்களில் தடுப்பு அரண் அமைக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றதைக் காண முடிந்தது.

இந்த ஆண்டு வடக்கு பகுதியில் மட்டும் ரூ. 25 கோடியே 65 லட்சத்து 5 ஆயிரத்து 405-க்கு விற்பனை ஆகியுள்ளது. பலகார கடைகள், துணி கடைகளிலும் புத்தாடை வாங்கக் கூட்டம் அலைமோதியது. மொத்தத்தில் இந்த தீபாவளி ஒரு சாராருக்கு சந்தோஷத்தையும், மற்றொருவருக்கு ஏமாற்றம் அளிக்கும் தீபாவளியாகவே அமைந்துள்ளது, என்றார்.