கோவை : கோவையில் கடந்த 2 நாட்களில் மட்டும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிறுமி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் அரசு மருத்துவமனையில் டெங்கு, பன்றி மற்றும் வைரஸ் காய்ச்சலால் பதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை நாளான நேற்று மட்டும், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த சுபஸ்ரீ (14) என்ற சிறுமியும், தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (32) என்பவரும் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். இதேபோல, சேவூர் சேலம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (39) என்பவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த போத்திராஜ் (57) டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். தொடர்ந்து, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் இறப்பு வீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறையும், மாநகராட்சியும் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது, பன்றி, டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் 87 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.