நீலகிரி : உதகை குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன் பகுதியில் வேட்டையாடுவதற்காக இரண்டு நாட்களாக பதுங்கியிருந்த சிறுத்தையை நாய் விரட்டியடித்த சி.சி.டி.வி., காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதகை அருகே பாரத் நகர் குடியிருப்பு பகுதியில் வசந்தகுமார் என்பவரது வீட்டில் கடந்த இரண்டு தினங்களாக இரவில் அவர்களது செல்லப்பிராணியான நாய் குரைத்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த வசந்தகுமார் இரண்டு நாட்களுக்குப் பின் தனது வீட்டில் உள்ள Cctv கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, வீட்டு முன் பகுதியில் சிறுத்தை ஒன்று நாயைப் பிடிக்க பதுங்கி இருப்பதும், சிறுத்தையை நாய் விரட்டுவதும் பதிவாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து வனத்துறையினர் மற்றும் ஊர்மக்களிடம் தகவல் அளித்தார். பின்னர், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே, அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பு இந்த சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.