கோவையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்த 184 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை : கோவை மாவட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசுகள் வெடித்ததாக மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 184 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசுகள் வெடித்ததாக மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 184 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தீபாவளியன்று வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விதியை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது தமிழகம் முழுவதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

கோவை மாநகரில் போலீசார் 4 டிவிஷனாக பிரித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், மேற்குப்பகுதியில் 32 வழக்குகளும், கிழக்குப் பகுதியில் 27 வழக்குகளும், மத்திய பகுதியில் 44 வழக்குகளும், தெற்கு பகுதியில் 22 வழக்குகளும் என மொத்தம் 125 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 மற்றும் 285 என இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அதேபோல, கோவை புறநகர் பகுதிகளில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான பெரிய நாயக்கன்பாளையம் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் 14 வழக்குகளும், பேரூர் சப் டிவிஷனல் 10 வழக்குகளும், கருமத்தம்பட்டி சரகத்தில் 8 வழக்குகளும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 12 வழக்குகளும், வால்பாறை பகுதியில் 15 வழக்குகள் என மொத்தம் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகர காவல்துறை சார்பில் மொத்தம் 125 வழக்குகளும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு உட்பட்டு 59 வழக்குகள் என மொத்தம் 184 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...