கோவை : கோவை மாவட்டம் ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பன் நகர் ரயில்வே சுரங்கபாலம் கட்டுமான பணிகள் முடிவு பெறாத நிலையில், அதன் வெளிப்பகுதியில் உள்ள சிறுதூண் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. இதனால், பாலத்தின் தரம் குறித்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட ரத்தினபுரி அருகே உள்ள தயிர்டேரி-கண்ணப்பன் நகர் ரயில்வே சுரங்க பாலம் பணிகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தமிழக அரசால் ரூ. 14 கோடிக்கு அறிவிக்கப்பட்டு, தற்போது அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை - மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து ரத்தினபுரி வழியாக சிவானந்தாகாலனி செல்லவும், கண்ணப்பன் நகர், தயிர்டேரி பகுதியிலிருந்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லவும் இந்த ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்னர், இவ்வழியாக ரயில்வே கிராசிங்கை கடந்து தான் மக்கள் செல்லும் சூழ்நிலை நிலவி வந்தது. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் எந்தசிரமும் இல்லாமல் கடந்து செல்லவே இந்த சுரங்க பாலம் அமைக்கப்படுகிறது. இதனிடையே, ரயில்வே சுரங்க பாலம் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், மீதம் உள்ள சாலை அமைக்கும் பணிகள், பாலத்தின் மீது வாகனங்கள் உரசாமல் இருக்க தடுப்பான்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், தடுப்பான் அருகில் உள்ள சிறுதூண் ஒன்று இன்று அதிகாலை திடீரென சரிந்து விழுந்துள்ளது. பாலம் உபயோகத்தில் இல்லாத காரணத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், கட்டுமானப் பணிகள் நிறைவடையாத நிலையிலேயே, இதுபோன்ற இடிபாடுகள் ஏற்படுவதால் பாலத்தின் தரம் குறித்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.