திருப்பூர்: திருப்பூரில் உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி துணிகளை தைத்து தரமுடியாததால் மனமுடைந்த பெண் டெய்லர் சாணிப் பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பாப்பண்ணா நகரில் கடந்த 5 ஆண்டுகளாக பெண்கள் தையல் நிலையம் நடத்தி வருபவர் பத்மினி (41). திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்த இவர், தனது கணவரை பிரிந்து தனது தாய் அம்பிகா, மகள் தமிழரசி மற்றும் மகன் லிபின்சாகர் உடன் திருப்பூரில் தங்கி சொந்தமாக பெண்கள் தையல் நிலையமும் நடத்தி வருகிறார். இவர் தைத்து தரும் துணிகள் நன்றாக இருந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த பலர் இவரிடம் தங்கள் துணிகளை கொடுத்து தைத்து வந்துள்ளனர். இதனால், நம்பிக்கையானவர் என்ற பெயரையும் பத்மினி அந்த பகுதியில் பெற்றிருந்தார். இந்த நற்பெயரின் காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு துணிகள் தைத்து தர ஏராளமானோர் நாடியுள்ளனர். ஒரு கட்டத்தில் அதிக துணிகள் வரவே தன்னால் தைத்து தரமுடியாது எனவும் பத்மினி தெரிவித்துள்ளார். எனினும், வாடிக்கையாளர்கள் உங்களால் முடியும் தைத்து தாருங்கள் என தெரிவித்துள்ளனர்.

இதனால், கடந்த நான்கு நாட்களாக இரவு பகலாக தைத்து வந்துள்ளார். இருப்பினும், இறுதியாக சில துணிகளை தைத்து தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக நற்பெயர் பெற்று வந்த நிலையில், தைத்து தருவதாக வாங்கிய துணிகளை தைத்து தரமுடியாததால் நற்பெயர் கெட்டு விடும் என மனமுடைந்து சாணிபவுடரை கரைத்து குடித்து பத்மினி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் பத்மினியின் உடலைக் கைப்பற்றி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.