பண்டிகை கால தொடர் விடுமுறையினால் நீலகிரியில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் : வியாபாரிகள் மகிழ்ச்சி

நீலகிரி : தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால தொடர் விடுமுறையின் காரணமாக நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


நீலகிரி : தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால தொடர் விடுமுறையின் காரணமாக நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



தீபாவளி பண்டிகையின் தொடர் விடுமுறை காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான தொட்டபெட்டா, படகு இல்லம் பைக்காரா, படகு இல்லம், லேம்ஸ்ராக், டால்பி நோஸ், மலைரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.



நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளுகுளு காலநிலையினை அனுபவிப்பதற்காகவும், சுற்றுலா தலங்களில் உள்ள இயற்கை காட்சியை காண்பதற்காகவும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் திரளுகின்றனர். குறிப்பாக, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள் இன்று அதிக அளவில் காணப்பட்டனர். சில சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் வந்திருந்தனர். 



அதேவேளையில், சுற்றுலா வந்தவர்கள் சுற்றுலா தலங்களுக்கு வெளியே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் வாங்கி மகிழ்கின்றனர். இதனால், வியாபாரம் களைகட்டியிருப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் நடைபாதை வியாபாரிகள், தொடர் விடுமுறை தங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...