திருப்பூர் : போதிய பேருந்து வசதி இல்லாததால், தீபாவளிப் பண்டிகைக்காக திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளிடம் தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்றைய தினம் பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்களில் போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தீபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட துணிகள், இனிப்பு வகைகள், பட்டாசு போன்றவை வாங்குவதற்காக திருப்பூரின் முக்கியப் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனையடுத்து, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களே அதிகளவில் உள்ள நிலையில், திருப்பூரில் இருந்து சிதம்பரம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்வதற்காக போதுமான பேருந்து வசதிகளை அரசு செய்யவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டப்படுகின்றனர். இதனைப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாகவும், இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.