நீலகிரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் உடல்நிலை சீரடைந்துவிட்டது : சுகாதாரத்துறை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :- நீலகிரி மாவட்டம் லவ்டேல் பகுதியில் உள்ள பள்ளியில் டெல்லி, பீகார், பெங்களுர் போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் படிக்கின்றனர். இவர்களுக்கு விடுமுறை கிடைக்கும் போது அவ்வப்போது வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பி வருவதால், அங்கிருந்து இந்தக் காய்ச்சல் பரவியுள்ளது. முதலாவதாக சென்னையில் இருந்து வந்த ஒரு மாணவியிடம் இருந்து இந்தக் காய்ச்சல் பரவியது கண்டறியப்பட்டுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து, அரசு தரப்பில் 3 மருத்துவர்கள் கொண்ட குழுவும், பள்ளியின் சார்பில் ஒரு மருத்துவரும் மொத்தம் நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு பள்ளியில் உள்ள மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட 10 மாணவ, மாணவியரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த பன்றி காய்ச்சல் மேலும் மற்றவர்களுக்குப் பரவாமல் இருப்பதற்காக, இவர்கள் 10 பேரும் பள்ளியின் மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இவர்கள் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்பி வகுப்புகளுக்கு செல்லும் அளவிற்கு தயாராகி விட்டனர். அதேநேரத்தில், இப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதால், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். மேலும், கடந்த வாரம் கோவையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் ஒருவர் பூரண குணமடைந்து விட்டார். 

தற்போது, தீபாவளி விடுமுறை தொடர்ந்து வரும் சூழலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த அனைத்து சோதனை சாவடிகளிலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...