கோவை : கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும், மழை வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் அடிக்கும். வானம் தெளிவாக காணப்படும் அதேசமயம், அதற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு, அதாவது நவம்பர் 8 மற்றும் 9-ம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 31 டிகிரி செல்சியஸ்யாகவும், இரவுநேர வெப்பநிலை 23 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது.
கோவையைப் பொறுத்தவரையில் 5 முதல் 6 கிலோ மீட்டர் வரை மட்டுமே காற்றின் வேகம் வீச வாய்ப்புள்ளது," என்றார்.