திருவனந்தபுரம் : சபரிமலை கோயிலை பூட்டக்கூடாது என்றும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை தடுக்கக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவனந்தபுரம் : சபரிமலை கோயிலை பூட்டக்கூடாது என்றும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை தடுக்கக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் இன்று மாலை நடைதிறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்தால் உடனடியாக கோயில் நடை சாத்தப்படும் என தலைமை நம்பூதிரி மிரட்டல் விடுத்திருந்தார். நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருமுடி கட்டிய பக்தர்களையும், ஆண் பத்திரிக்கையாளர்களையும் மட்டும் கேரள போலீசார் கோயிலுக்கு செல்ல அனுமதி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சபரிமலை கோயிலை பூட்டக் கூடாது. கோயில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது. பக்தர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கக் கூடாது. வாகனங்களை சேதப்படுத்திய போலீசார் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும், இவ்வாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.